Arulmigu Vageeswarar Temple :
Vageeswarar Temple, devoted to Lord Shiva, is situated in the town named Peruncheri located in Mayiladuthurai Taluk. The Presiding Deities are God Vageeswarar also pronounced as Vakeeshwarar/Vagheeswarar and Goddess Swantharanayagi.
Since Brihaspathi worshipped Lord Shiva here, this Lord and Temple got its name (Vaak - Brihaspathi and Eeswarar - Lord Shiva). This is one of the Guru Dosha Parihara Sthalam. This Temple is adorned with Sthala Theertham as Brihaspathi Theertham.

Sthala Purana/ History In Tamil
48,000 மகரிஷிகள் தவம்செய்து பேறுபெற்ற தாருகாவனம் என்னும் தலம் தான் பெருஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. தவம் செய்வதற்கு தகுந்த இடம் வேண்டி ரிஷிகள் அனைவரும் பிரம்மனிடம் ஆலோசனை கேட்டனர். அவர் தர்ப்பையினால் ஒரு வளையம் செய்து, "இது பூமியில் எங்கு போய் விழுகின்றதோ அவ்விடத்தில் தவம் செய்யலாம்'' என்று கூறி வளையத்தை வீசினர். அது தருகவனத்தில் விழுந்தது. எனவே ரிஷிகள் இவ்விடத்தில் தவம் மேற்கொண்டனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக வசிக்கும் இடத்தை சேரி என்பர். 48000 முனிவர்கள் யாகம் செய்து, தவம் செய்ததால் பெரிய சேரி- பெருஞ்சேரி என்று பெயர் பெற்றது.

வியாழன் சிவனிடம் தவம் செய்து , தனக்கு ஞானம்,மனம் சாந்தி மற்றும் தேவர்களுக்கெல்லாம் குருவாகும் பேறு பெற வேண்டும்'' என்று வரம் கேட்டார்.
இறைவனும் மனமிரங்கி, "மயிலாடுதுறைக்கு தென்பால் தாருகாவனத்தில் லிங்கம் நிறுவி வழிபாடு செய் அங்கு வந்து அருள் செய்வேன்" என்று வாக்கருளினார். அதன்படி வியாழன் தாருகாவனமான பெருஞ்சேரிக்கு வந்து ஞானதீர்த்தம் அமைத்து சுவாமி, அம்பாளை பிரதிஷ்டை செய்து, பல ஆண்டுகள் தவமிருந்து சிவவழிபாடு மேற்கொண்டு, முடிவில் பஞ்சாக்னி ஹோமம் செய்தார். மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை மூன்றும் ஒருசேரப்பட்ட நன்னாளில், வியாழனை தேவர்களுக்கு குருவாக சிவபெருமான் இத்தலத்தில் நியமித்தார்.
வியாழன் பெருஞ்சேரியில் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்றதாலும், இறைவனின் வாக்கு பெற்றதாலும் இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல்- வாகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . வியாழன் தேவகுருவாக பொறுப்பேற்ற தலம் என்பதால் சிறந்த குரு பரிகாரத் தலமாக இது கருதப்படுகிறது .
தட்சன் சிவனை அழைக்காமல் மற்ற தேவர்கள் அனைவரையும் அழைத்து யாகம் மேற்கொண்டமையால்,கோபம் கொண்ட சிவன் வீரபத்திரரிடம் தட்சனின் தலையை கொய்யுமாறு ஆணையிட்டார். சிவன் சொல்படி யாகத்தை சிதைத்து தட்சனின் தலையை கொய்து அக்னியில் இட்டார்.
இப்படி யாகத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தபோது, பிரம்மரும் அவரது மனைவி சரஸ்வதியும் மாட்டிக் கொண்டார். வீரபத்திரரின் சினத்தினால் சரஸ்வதி தேவியின் மூக்கு அறுக்கப்பெற்றது.
தனது அங்கங்குறை நீங்க பெருஞ்சேரி வந்து தவமிருந்து வாகீஸ்வரரை வழிபட்ட சரஸ்வதிமுன் தோன்றிய சிவனிடம் "எனது அங்கக்குறை நீங்கி, எல்லாருடைய நாவிலும் வாக்கு விருத்தியளிக்கும் அருளை எனக்குத் தர வேண்டும்'' என்று சரஸ்வதி வேண்ட, அப்படியே இறைவன் அருள் புரிந்தார். சரஸ்வதி இழந்த மூக்கைப் பெற்றாள். வாக்கு வண்மையளிக்கும் அருளும் பெற்றாள். இப்படி கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு அருள் புரிந்த பெருமை கொண்டவரே பெருஞ்சேரி வாகீஸ்வரர்.
Significance:
உள்பிராகாரத்தில் சரஸ்வதி சிவனை வழிபடும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது. கிழக்குப் பிராகாரத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் நான்கு பைரவர் சிலைகள் உள்ளன. குரு தோஷம் நீங்க , குரு பலம் பெற , திருமணத் தடை விலக , புத்திர தோஷம் நீங்க, வம்ச விருத்தி அடைய , பதவி உயர்வு பெற வழிபட வேண்டிய உன்னத தலங்களில் ஒன்று பெருஞ்சேரி.
சந்திரன், தாரை, சரஸ்வதி, தத்தசோழன் வழிபட்டு பேறுபெற்ற தலம் ஆகும். மேலும் குரு விசேஷ தலம் ஆகும்.
வாக் என்ற சொல் பிரகஸ்பதியை குறிக்கும் அதனால் பிரகஸ்பதி வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் வாக்-ஈஸ்வரர் என ஒரு பொருளும் கொள்ளலாம்.
Temple Timings & Address :
The temple remains open from 6 pm to 12 Noon and from 4 pm to 8 pm.
Address :
Arulmigu Vakeeswarar temple,
Perunjeri Village,
Mayiladuthurai Taluk, Nagapattinam
No comments:
Post a Comment