Temple information, Interesting Hinduism facts, Hindu Gods photos, images and HD wallpapers free download.

Wednesday, 2 June 2021

Madapuram Dakshinamurthy Thiruvarur | மடப்புரம் தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகள் | Thiruvarur

Madapuram Dakshinamurthy Swami | மடப்புரம் தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகள்:

Guru Madapuram Dakshinamurthy Swami is an incredible Saint lived in nineteenth century in Tamil nadu. It is said that the holy person got jeeva samadhi in 4 places(Thiruvarur, Vannarapetta – Chennai, Nellai and Rangoon) in 1835.

பிறப்பு சரித்திரம் :



சிவசிதம்பரம் மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சென்று வழிபாடு செய்தனர்.கனவில்  தோன்றி அருளிய சிவன் தானே மகனாக பிறப்பேன் என்று கூறி மறைந்தார். பின்னர் திருவாரூர் திரும்பிய தம்பதிகள், கனவில் கண்டது போலவே பிள்ளை பாக்கியம் பெற்று,ஒரு ஆன் பிள்ளையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு அருணாச்சலம் என்று பெயர் சூட்டினர்.  பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து பிறந்த ஆன் குழந்தைக்கு நமசிவாயம் என்று பெயர் சூட்டினர். ஐந்து வயதாகியும் அருணாச்சலம் பேசாமல் மௌனமாக இருப்பது கண்டு வருத்தமடைந்த பெற்றோர் சிவனடியார் ஒருவரை கண்டு தங்களது மனக்குறையை கூறி இல்லத்திற்கு அழைத்து வந்தனர். அந்த சிவனடியார் பத்மாசனத்தில் அமர்ந்திருந்த சிறுவனை நோக்கி அமைதியாய் இருக்கும் நீ யார் என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் "நீயே நான் நானே நீ" என்று கூறினார். அதை கேட்ட சிவனடியார் "நன்று நன்று" என்று கூறி மறைந்தார். வந்தவர் சிவபெருமானே என்று அறிந்த தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பிறகு பள்ளியில் சேர்ந்து படிக்கும் காலத்தில் பாட சுவடிகளை முன் வைத்து கண்களை மூடி நிஷ்ட்டையில் அமர்ந்துவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.ஆசிரியர் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் சரியான விடைகளை கூறி வியப்பில் ஆழ்த்தினார். அவரது தெய்வீக தன்மைகளை உணர்ந்த ஆசிரியர் அவரை நடத்தும் விதம் கண்டு படிப்பை முடித்துக்கொண்டார். 

தன் பெற்றோர்கள் மறைந்த பிறகு திருவாரூரிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அனைவருக்கும் அருள்புரிந்து வந்தார். நதிக்கரை குளக்கரை ஓரங்களிலும் மையங்களிலும் தனிமையில் தவம் செய்து வந்தார்.பல்வேறு ஊர்களை கடந்து மீண்டும் திருவாரூர் வந்து சேர்ந்தார்.

சுவாமிகளின் மகிமை:  

சித்தூரை சார்ந்தவர் சோமநாத முதலியார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர்  செய்யாத வைத்தியம் இல்லை. செல்லாத ஸ்தலங்களும் இல்லை.எந்த மருத்துவமும் தன்னை காக்காத நிலையில் மனம் உடைந்த முதலியார் இறுதியாக சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்து அடைந்தார். அங்கு ஒரு தூணின் மறைவில் காத்திருந்த முதலியார் எல்லோரும் கோயிலை விட்டு சென்றபின் நடராஜரின் கருவறைக்கு சென்று தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில்  தனது வயிற்றை கிழிக்க முயன்றபோது அங்கு அசரீரியாய் ஒரு குரல் "நோய் இங்கு தீராது. திருவாரூரில் தக்ஷ்ணாமூர்த்தி சென்று கண்டால் உன் பிணிக்கு வழி கிடைக்கும்" என்று கூறியது. நடராஜரே கூறியதாக  கருதிய முதலியார்,  திருவாரூர் சிவன் கோயில் வந்தடைந்து அங்குள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் பூஜைகளை மேற்கொண்டு அங்கேயே தூங்கினார்.மீண்டும் கனவில் அருளிய கடவுள்,நான் தரிசிக்க சொன்னது இந்த தக்ஷ்ணாமூர்த்தி அல்ல. சாலைகளில் நிர்வாணமாக ஒருவர் இருப்பார் அவரை சென்று கான் என்று கூறி மறைந்தார். அதே போல் தெருக்களில் நிர்வாணமாக இருந்த ஞானியை கண்டார் முதலியார். நடராஜர் அனுப்பினாரா என்று வினவியபடி தனது கையில் இருந்த ஒரு உருண்டை சாதத்தை அளித்து உண்ணுமாறு கூறினார்,சுவாமிகள். அதை உண்ட முதலியார் தனது பிணியில் இருந்து   விடுப்பெற்றார். 

ஜீவ சமாதி :

இவரது மகிமையை மக்களுக்கு உணர்த்த நினைத்த முதலியார் அவர்க்கு சிறு மடம் அமைத்துக்கட்டினார். அந்த மடமே அவரது சமாதி கோயில் ஆயிற்று .

இக்கோயிலின் கருவறையில் காசியில் இருந்து கொண்டுவந்த பாணலிங்கம் பிரதிஷ்டை செய்ய பட்டுள்ளது. அந்த லிங்கத்தின் கீழ் ஸ்வாமிகளின் சமாதியாக நிலவறை  அமைக்கப்பட்டுள்ளது . கோவிலின் முன் குளம் ஒன்று  இன்றும் நீர் நிறைந்து காணப்படுகிறது. கோயிலில் தஞ்சை ஆண்ட சரபோஜா மன்னரால் அளிக்கப்பட்ட மொஹரா(முரசு) ஒன்று இன்னும் கோயிலில் உள்ளது.பல்வேறு சித்து ஆடல்கள் புரிந்து அற்புதங்கள் நிகழ்த்தி அண்டி வரும் அனைவர்க்கும் அருள்புரிந்த ஆண்டவனாலேயே தக்ஷ்ணாமூர்த்தி என்று பெயரிடப்பட்ட அந்த சத்குரு ஆவணி மாதம் உத்திரம்  நட்சத்திரத்தில் மதியம் பனிரெண்டு மணியளவில் விதேக முக்தி அடைந்தார் . அவரது உடல் முன்குறிப்பிட்ட சமாதி கோயிலின் நிலவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அவரது குரு பூஜை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.



Address :

Mukthi Vinayagar Koil St, Thiruvarur, Madapuram, Tiruvarur – 610001

ஓம்  ஸ்ரீ  குரு  தக்ஷ்ணாமூர்த்தியே  நமஹ !!!

4 comments:

  1. Can you provide the exact location

    ReplyDelete
  2. near thiruaarur big temple

    ReplyDelete
  3. A really sacred place to get blessings

    ReplyDelete
  4. Guru poojai month and date

    ReplyDelete