ThirumanniKarai Neelakandeswarar Temple
ஸ்தல புராணம்:
முன்பொரு சமயம்,ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறிய பஞ்ச பாண்டவர்கள் இலுப்பை மரங்கள் அடர்ந்த மதூக வனம் (மதூகம் - இலுப்பை ) என்று அழைக்கப்படும் இவ்விடத்திற்கு வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.இவ்விடம் இலுப்பைப்பட்டு என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. இவர்கள் இருப்பிடத்தை அறிந்த வஞ்சகன் துரியோதனன் தன் ஒற்றர்கள் மூலம், இவர்கள் பயன்படுத்திய நீர் நிலையில் விஷத்தை கலக்க உத்தரவிட்டான். காரூண்ய மூர்த்தியாகிய அம்பிகை, தன் பதி சிவ பெருமான் உண்ட விஷத்தை அவர் கண்டத்தில் நிறுத்தி அமுதமாகிய அமிர்தகரவல்லி தாயார், பாண்டவர்களின் உயிர் காக்க அக்குளத்தில் அமிர்தத்தை கலந்தாள். நச்சு பொய்கையானது அமிர்த குளமாக மாறியது.
இறைவியின் கருணையினால் காப்பாற்ற பட்ட பாண்டவர்கள் ஐவரும்,
- தர்மர் நீலகண்டேஸ்வரர் சமேத அமிர்தகரவல்லி தாயார் சந்நிதியையும்
- பீமன் பதினாறு பட்டைகளை உடைய பதினாறு வகை நற்பேருகளையும் தரவல்ல சோடச லிங்கத்தை மகதீஸ்வரர் என்ற பெயரில் ஒரு சந்நிதியையும்
- அர்ஜுனன் படிக்கரை நாதர் சமேத மங்களாம்பிகை சந்நிதியையும் மற்றும்
- நகுலன் பரமேஸர் சந்நிதியையும்,
- சகாதேவன் முக்தீசர் சந்நிதியையும் நிறுவி வழிபட்டனர்.
- திரௌபதி அங்குள்ள வலம்புரி விநாயகரை வழிபட்டதாக ஐதீகம்.
தவிர இக்கோயிலில் நடன விநாயகரும் உண்டு.
ஸ்தல சிறப்பு:
சுந்தரரால் பாடப்பெற்ற சிறப்புமிக்க இத்தலத்தில் அருணகிரிநாதரால் புகழ்ந்து பாடப்பெற்ற முருக பெருமானும் ,
நந்தியின் மேல் நின்ற நிலையில் தேவர்கள் புடை சூழ பத்து கரங்களுடன் நடராஜரும் ,
எட்டு கரங்களுடைய துர்க்கையும் இந்த கோவிலை சிறப்பிக்கின்றனர்.
குறிப்பாக வெளிப்புற சுற்றில் ஒரே பீடத்தில் சூரியன் , அவர் மகன் சனி,சனியின் குரு பைரவர் மூவரும் அருகருகே நின்று அருள் பாலிக்கிறார்கள்.
தேவாரம் பாடல் பெற்ற காவேரி வடகரை ஸ்தலங்களில் இது முப்பதாவது ஆகும். மேலும் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தம் மகிமை உடையதாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் காணப்படும் நந்தியின் இரண்டு காதுகளிலும் இடையே ஒரு ஓட்டை உள்ளது. இது சிற்பக்கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
இத்தலம் வைத்தீஸ்வரர் கோயிலில் இருந்து மணல்மேடு பாப்பாக்குடி வழியில் பனிரெண்டாவது கிலோமீட்டரில் உள்ளது.
முற்காலத்தில் இந்த ஆறு மண்ணியாறு என்று அழைக்கப்பட்டதால் இக்கோயில் திருமன்னிக்கரை கோவில் என்றும்,இறைவன் பழமண்ணி படிக்கரை நாதர் எனவும் அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment