பாடகச்சேரி மகான் இராமலிங்க சுவாமிகள் | Padagacheri Mahan Sri Ramalinga swamigal :
Chennai is filled with great temples and Jeeva Samadhis. One such Saint's Jeeva Samadhi is located in Thiruvotriyur. He is popularly known as Padagacheri Swamigal. Since he has great love towards dogs, he is also called as Bairava Sithar. Thiruvotriyur is famous for Vadivudayamman temple and Padagacheri Swamigal Samathi. He is one of the prominent mentioned saints of 20th century who has spent their lifetime in serving to the needs of people and helping them to recover from all their illness.
சித்தரின் வரலாறு(Tamil):
பைரவ சித்தர் என்று அழைக்கப்படும் இவர்,திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் ஜீவ சமாதிக்கு அருகில் சமாதி கோயில் கொண்டிருக்கும் சுவாமி இராமலிங்கம் என்று போற்றப்படும். சிவ சித்தர் 1876 அம் ஆண்டு கந்தசாமி - அர்த்தநாரி தம்பதிகளுக்கு மகனாக கோவை மாவட்டம் மஞ்சம் பாளையத்தில் அவதரித்தார். பெற்றோரின் பூர்விகம் கர்நாடகா சென்றவர் அங்கு பெல்லாரியில் புகழ் பெற்று விளங்கிய மஹான் ஏரிதாதா என்பவருக்கு சீடன் ஆனார்.
பிறகு கும்பகோணம் வந்து வலங்கைமானில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள இடமான பாடகச்சேரி கிராமத்தில் தங்கி அருள் சாதனைகளை செய்து வந்தார். தனது 12வது வயதில் வடலூர் வள்ளல் பிரான் அவர்களிடம் ஞான உபதேசம் பெற்று மக்கள் பிணி நீக்கி வந்தார். ஒரு நாளைக்கு 3 உருண்டை கவலை சத்தம் சாப்பிட்டு இறை பணி புரிந்து வந்தார். பல காலம் திகம்பரராக சுற்றி திரிந்தார். யாராலும் எந்தவித மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத செட்டிநாட்டை சேர்ந்த பெரும் தனவந்தர் ஆதப்ப செட்டியார் அவர்களின் தொழுநோயை தீர்த்து வைத்தார். அவருடைய அழுகிய கை விரல்கள் மீண்டும் வளர தொடங்கியதுவே இவரது ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகும்.
உடலில் இருந்து உறுப்புக்கள் துண்டங்களாகி பிண் மீண்டும் ஒன்று சேர்த்து உயிர்பெற்று வரும் சாதனை நலகண்டயோகம் என்பர். அதில் சுவாமிகள் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
சித்தரின் மகிமை :
சாப்பாட்டு வேளைகளில் இவர் அழைத்ததும் எங்கிருந்தோ வரும் நாய்கள் கூட்டம் எந்த வித சச்சரவும் இன்றி அமைதியாக இவர் இலையில் படைத்த விருந்தில் சாப்பிட்டு செல்லும். எவ்வளவு இலைகள் பரிமாற பட்டிருக்கிறதோ அதற்கேற்ப எண்ணிக்கையில் நாய்கள் சாப்பிட வருவது மிகப்பெரிய அதிசயமாக அப்போது அறியப்பட்டது.
குடந்தை நாகேஸ்வர கோயில் கட்டுமான பணிக்கு கழுத்தில் உண்டியலை மாலையாக மாட்டிக்கொண்டு பணம் வசூலித்ததும், கூலி வேலை செய்பவர்களுக்கு அவர்களுக்குரிய கூலிக்கு பதில் விபூதி பிரசாதம் கொடுப்பதும், அதுவே அவர்களுக்கு உரிய பணமாக மாறி விடுவதும் அற்புத செயல்களாக பதியப்பட்டுள்ளது. இன்றும் நாகேஸ்வரர் கோயிலில் இடது புறத்தில் அவருக்கு ஆளுயர சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளதை காணலாம் .
குடந்தை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் செட்டிமண்டபம் என்ற இடத்தில ஒரு சிறு மடம் கட்டி அதில் தனக்கான சமாதிக்கு என்று நிலவறை ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தார். அவ்விடத்தில் கூழ் சாலை ஒன்று அமைத்து அவ்வழி செல்வோருக்கு கூழ் அளித்து பசி பிணி தீர்த்து வந்தார். தற்போது அவர் சமாதி கொள்ள கட்டப்பட்டிருந்த இடத்தில் பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் நிறுவப்பட்டு வழிபட்டு வருகிறது.
1949ம் ஆண்டு ஆடிப்பூர நன்னாளில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி அடைந்தார். அவரது சமாதி கோயிலிலும் , பாடகச்சேரி கோயிலிலும் மற்றும் கூழ் சாலையிலும் ஆண்டு தோறும் குரு பூஜை அன்னதானத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Jeeva Samathi Address & Timings :
The samadhi is open from Morning : 9 to 12 and Evening : 4 to 7.
Address :5/1C, Pattinathar Koil St, Mavena Nagar,
Tiruvottiyur, Chennai, Tamil Nadu 600019
No comments:
Post a Comment