Temple information, Interesting Hinduism facts, Hindu Gods photos, images and HD wallpapers free download.

Tuesday 25 May 2021

Thirumoolar Thirumanthiram | The Great Saint Thirumoolar/Tirumular | Thirumanthiram / Tirumantiram Verses | Tamil Tirumantiram | கயிலை மாமுனி திருமூலர் | திருவாவடுதுறை | திருமந்திரம்

Thirumoolar:

Thirumoolar also called as Tirumular, one of the 18 Siddhas is an incredible Tamil yogi, generally designated in the period of 3000 BC and said to have lived for a very long time of 3000 years. It is believed that the period of Thirumoolavar's existence is the same as the time of Epic Ramayana happened. His life history is referenced in Periya Puranam as he is one among the 63 Nayanmars. The core teaching of Tirumoolar is all pervading Love. He taught God or Highest consciousness is in every single one of us and always attainable. 



Golden words of Thirumoolar :

Thirumoolar has given us many evergreen words for lifetime. Some famous quotes among them are 
  • ஒன்றே குளம் ஒருவனே தேவன் 
  • அன்பே சிவம் 
  • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

Some Hymns from Thirumoolam are as follows

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது  aaரும்  அறிவிலார்
அன்பே சிவமாவது  aaரும் அறிந்தபின் 
அன்பே சிவமாய்  அமர்ந்து  இருந்தாரே 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.


யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
  

திருமந்திரம் அளித்த திருமூலர் :

                                                                        Thirumoolar

சுந்தரானந்தர் என்ற இயற்பெயர் உடைய மகாமுனி கையிலையில் சிவபெருமானின் முதற் சீடரான நந்தீஸ்வரருக்கு பிரதான சீடராக இருந்தார். இவரது குருபீடம் கையிலை ஆகும். சிவ ஆகமங்கள் இருபத்தியெட்டும் சமஸ்க்ருதத்தில் இருந்தபடியால் அதை தமிழில் வெளிப்படுத்துவதற்கு சிவபெருமான் ஆணைப்படி தமிழகத்திற்கு விஜயம் செய்தார் .

சிதம்பரத்தில்  வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களுடன் சிவபெருமானின் திருநடனம் கண்டு களித்து அகத்தியரை தரிசிக்க பொதிகை மலை செல்லும் வழியில் திருவாவடுதுறை வந்தார். அங்கே ஆநிறை மேய்க்கும் மூலனை இழந்த பசுக்களின் வாட்டம் போக்க தன் யோக சக்தியினால் மூலன் உடலில் நுழைந்து பசுக்களின் இருப்பிடம் சேர்த்தார். மூலனின் உடலின் புகுந்த சுந்தரானந்தர், திருமூலர் என்ற பெயருடன் திருவாவடுதுறை  ஒரு அரச மரத்தடியில்  தவம் செய்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களை தமிழில் அருளினார். 

அவர் இயற்றிய பாடல்கள் ஒன்பது ஆகமங்களை தன்னில் கொண்டு திருமந்திரம் என்ற பெயருடன் விளங்கலாயிற்று. மனிதர்கள்,பூமி மற்றும் அணைத்து அண்டங்களுக்கும் இடையே மின் காந்த அருள் அலைகள் நிரம்பி ஓய்வின்றி சுழன்று கொண்டு இருக்கின்றன. திருமூலர் தன் பிண்டத்தை சுற்றியுள்ள மின் காந்த அலைகளை தன் தவ முயற்சியினால் அண்டத்தில் இயங்கும் அருள் அலைகளுடன் இணைத்து கொண்டு இத்தகைய அற்புதமான தமிழ் நூலை இயற்றியுள்ளார். இந்த தெய்வீக மூல சுவடிகள் காலப் போக்கில் எவர்க்கும் கிட்டாது போயிற்று.

தமிழ் தந்த ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் பெருமான் திருவாவடுதுறை கோயிலுக்கு வழிபட வந்த போது கோவில் கொடிமரத்தின் கீழ் தமிழின் தனி மனம் வீசுவதாக கூறினார். அதை அடுத்து அவ்விடத்தை அகழ்ந்து பார்த்தபோது அங்கு திருமூலர் கைப்பட  எழுதிய திருமந்திர மூல ஓலை கிடைத்தது .

இன்றும் அவரது சமாதி கோவில் ஆடுதுறைக்கு அருகில் 69 சாத்தனூர் என்ற கிராமத்தில் உள்ளது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் திருமூலர் குரு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

"மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. "

No comments:

Post a Comment